கொல்லாதிருப்பாயாக ' பைபிள்கட்டளை - PART-II
'ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அக்கறையுடன் காத்துக் கொள்ள வேண்டும்' ( பழைய ஏற்பாடு - உபா 4 -15 )
'ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வையும் அக்கறையுடன் காத்துக் கொள்ள வேண்டும்' ( பழைய ஏற்பாடு - உபா 4 -15 ) சொல்லுகிறது. சைவ உணவுக்கு தரும் ஒப்புதலாக இதை எடுக்கலாம். இதற்கு 'Journal of American Medical Association, The American journal of Clinical Nutrition, The borden review of Nutrition research' முதலிய நூல்கள் ஆதாரமாகும்
மேலும், பழைய ஏற்பாடு இல் 'Tzar baaly hayyim' இது கிப்ரு மொழி வாசகம், மனிதன் பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பது இதன் மொழிபெயர்ப்பு ஆகும்.
மேற்கூறிய இரண்டு கட்டளைகளையும் சேர்த்தால் 'சைவ உணவு' என்பது ஒரு இயற்கையான முடிவு போல் வருகிறது.
பிராணிகளை நம் இஷ்டபடி எது வேண்டுமானாலும் செய்யலாம், இப்படி சொல்ல உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம். பைபிள் உபயோகபடுதிய ஹிப்ரு சொல் 'radah ' என்கிற மூலதில் இருந்து வருகிறது. 'Yirdu ' என்கிற சொலில் இருந்து எடுக்கப்பட்டது. ' பாதுகாவலனாக இருப்பது' என்கிற பொருளையும் இது தருகிறது. அதாவது நம்மை விட தாழ்வான பிறவியில் வந்துள்ள சகோதர சகோதரியான பிராணிகளை கொன்று சாப்பிடாமல் அவைகளை காக்க வேண்டும் என்று கூறுகிறது.
( ஆதியாகமம் 1 .26 )
( ஆதியாகமம் 1 .26 )
எடுத்துகட்டாக ஒரு அரசன் தன் மகளின் மீது ஆதிக்கம் உடையவன் சொன்னால், அதற்காக அவர்களை கொல்ல வேண்டும் என்பதல்ல. ஆதியாகமம் 1 .29 இல் சைவ உணவு சிபாரிசு செய்யபடுகிறது.
பிராணிகளுக்கு ஆத்மா உண்டு என்று ஆதியாகமம் 1 .30 கூறுகிறது. ஆத்மா என்பதற்கு 'Nephesh ' சொலும், உயிருள்ள என்பதற்கு 'chayah ' என்கிற சொல்லும் தான் மானிட உடலில் இருக்கும் ஆத்மாவை சொலவும் பயன்படுத்தபடுகிறது. எனவே மனித மற்றும் பிராணிகளிடமும் ஒரே ஆத்மா உள்ளது என்பது தெரிகிறது.
ஆத்மா (உயிர்) என்பது பிராணிகளுக்கும், மனிதனுக்கும் ஒன்றுதான். பிராணிகளை கொல்லலாம் என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் மனிதர்களையும் கொல்லலாம் என்று சொல்லுவார்கள், தங்களுக்கு சாதகமான வாசகங்களை பைபிளில் இருந்தே சொல்லுவார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
பைபிளின்பழையஏர்பாடுவில் ''கொல்லாதிருப்பாயாக' என்கிறகட்டளையை, ஏசு பைபிள் இல் கூறுகிறார். இதன் அர்தம் என்னவெனில் எந்தஉயிரினங்களையும் கொல்லாது நாம்பாதுகாக்க வேண்டும் என்பதாகும். நீங்கள் கூறியபடி, பார்த்தால் ஏசு 'கொலைசெய்யாதிருப்பாயாக' என்று மனிதர்களை மட்டும் குறிக்கும் 'கொலை' என்கிற சொல்லை பயன்படுதிஇருக்கவேண்டும்.
ஏசு, இருசொல்லின் வேறுபாடுகளை அறியாமல் இருந்தாரா! கடவுளின் கட்டளையை கடைபிடிக்கவில்லையானால், உங்கள் அன்பு எங்கே!கிருஸ்தவர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இந்த தவறை செய்கிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Christian_vegetarianism
http://www.jesusveg.com/index2.html
http://www.all-creatures.org/cva/honoring.htm
by karthik vaigai
No comments:
Post a Comment