Sunday, September 18, 2011

அர்த்த சாஸ்திரம் - சில வரிகள்



1.பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்லவில்லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.

2. எவன் ஒருவன் சகல சாஸ்த்திரம் கற்கிறானோ, நல்லது எது கெட்டது எது என்று உணர்ந்து நடக்கிறானோ, அவனே சிறந்தவன். அவனை எப்போதும் புகழ் சூழ்திருக்கும்.

3. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

4. ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .பணத்தை இழக்கும் போது மனைவியை காக்க வேண்டும் . பணத்தை இழந்தாலும், மனைவியை இழந்தாலும் தன் மனதைக் இழக்க கூடாது .

5. உங்களுக்கு மதிப்பு கிடைக்காத நாட்டிலோ, நீங்கள் பிழைக்க முடியாத நாட்டிலோ, நண்பர்கள் இல்லாத நாட்டிலோ, கல்வி கற்க முடியாத நாட்டிலோ வசிக்க வேண்டாம்.

6. இந்த ஐந்து விஷயங்கள் இல்லாத நாட்டில் ஒரு நாளும் இருக்க வேண்டாம், அவை வசதி படைத்தவன் , வேதம் ஓதும் வேதியன், முறை தவறாத மன்னன், ஆறு, மருத்துவன்.

7. அறிவுள்ளவன் ஒரு நாளும், வருமானம் தராத நாட்டிற்க்கும், எதற்கும் கலவைப்படாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், தவறு செய்வதற்க்கு நாணாத மக்கள் வசிக்கும் நாட்டிற்க்கும், புத்தி உள்ளவர்கள் இல்லாத நாட்டிற்க்கும், தானத் தருமம் செய்யாத நாட்டிற்க்கும் செல்ல மாட்டான்.

8. வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

9. ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், பெண், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

10. ஆணை விட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு, அறிவு நான்கு மடங்கு, தைரியம் ஆறு மடங்கு, காமம் எட்டு மடங்கு.

11.மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

12.வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

13.முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

14.யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

15. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

16. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

17.சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

18. பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்.

tanx 2 Kumara Vel 

No comments:

Post a Comment