பெரிய ஞானக்கோவை
1. சிவவாக்கியர் பாடல்
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வமென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையேயாகும் என்கிறார்.
“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல் மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும்
உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்கிறார்.
கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.
ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது. சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத் தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான் கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில் கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில் பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர். ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும், உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று வாதிடுகின்றனர். சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்டவாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து, ழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக் கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே
மனிதனுக்கு உருவ வழிபாடு ,தெய்வம் என்று ஒன்று உண்டு என சிறு வயது முதலாகவே வுனர்த்தவே .
அந்த சிறு வயதில் குழந்தைக்கு வேதா வேதாந்த சித்தாந்தமெல்லாம் புரியாது. ஆகவே அதை ஒரு உருவகமாய் கற்பனை செய்து நமது பெரியோர்கள் உருவ வழிபாடு; கோவில் என பலவற்றை நிறுவினர் .
சிறு வயதில் நாம் மணல் வீடு கட்டி விளையாடுவதுண்டு ,பிறகு பெரியவனானதும் அதிலா நாம் வசிக்கின்றோம் ?
அவ்வாறு வசிப்பது போல் இருக்கின்றது உருவ வழிபாடு .மெய்யான தெய்வத்தை னாடி அதில் அல்லவா னாம் குடியேறவேண்டும்.
அந்த சிறு வயதில் குழந்தைக்கு வேதா வேதாந்த சித்தாந்தமெல்லாம் புரியாது. ஆகவே அதை ஒரு உருவகமாய் கற்பனை செய்து நமது பெரியோர்கள் உருவ வழிபாடு; கோவில் என பலவற்றை நிறுவினர் .
சிறு வயதில் நாம் மணல் வீடு கட்டி விளையாடுவதுண்டு ,பிறகு பெரியவனானதும் அதிலா நாம் வசிக்கின்றோம் ?
அவ்வாறு வசிப்பது போல் இருக்கின்றது உருவ வழிபாடு .மெய்யான தெய்வத்தை னாடி அதில் அல்லவா னாம் குடியேறவேண்டும்.
விளக்கம் : மனிதனுக்கு உருவ வழிபாடு ,தெய்வம் என்று ஒன்று உண்டு என சிறு வயது முதலாகவே வுனர்த்தவே .
ReplyDeleteஅந்த சிறு வயதில் குழந்தைக்கு வேதா வேதாந்த சித்தாந்தமெல்லாம் புரியாது. ஆகவே அதை ஒரு உருவகமாய் கற்பனை செய்து நமது பெரியோர்கள் உருவ வழிபாடு; கோவில் என பலவற்றை நிறுவினர் .
சிறு வயதில் நாம் மணல் வீடு கட்டி விளையாடுவதுண்டு ,பிறகு பெரியவனானதும் அதிலா நாம் வசிக்கின்றோம் ?
அவ்வாறு வசிப்பது போல் இருக்கின்றது உருவ வழிபாடு .மெய்யான தெய்வத்தை னாடி அதில் அல்லவா னாம் குடியேறவேண்டும்.
இதனைப்பற்றி நமது தெய்வமவர்கள் கோடாயுதக்கூரில் விரிவாக அருளி உள்ளார்கள்- காணவும்.
--
ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .உருவ வழிபாடு தேவையில்லை.கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பது வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமானதாகும்.உடம்பின் உறுப்புகளை (தத்துவங்களை)சிலைகளாக வைத்து,பல கடவுள்கள் இருப்பதாக நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்,உண்மையை விட்டு தத்துவங்களை கடவுளாக எண்ணி மக்கள் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்,ஒழுக்கம் என்பது குறைந்து விட்டன,கடவுளுக்கு கை,கால,உடம்,இருபதாகவும்.குடும்பம்,மனைவி மக்கள் இருப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்,கடவுளுக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருபதாகவும் அவைகளை மனிதனுக்கு இருப்பதுபோல் காட்டி மக்களை குழப்பி விட்டார்கள்.கடவுளுக்கேஇப்படி இருக்கும்போது நமக்கு ஏன்இருக்க கூடாது என்று தவறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அதனால் ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டன.உருவவழிபாடு மக்களை நல்வழி படுத்தமுடியாது.அதனால் உருவ வழிபாடு தேவையற்றதாகும்.
ReplyDeleteகடவுள் ஒளியாக உள்ளார்,அவர் எல்லாஉடம்பிலும் உயிராக ஒளியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்,அந்த உயிரே கடவுளாகும்,ஆதலால் எல்லாஉயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே கடவுள் வழிபாடாகும் என்பதை நமது அருளாளர் வள்ளலார் தெளிவுபடுத்தியுள்ளார்.உடம்பிற்கு ஒரு உயிர்தான் இருக்கமுடியும்,அதுபோல் இந்த உலகத்திற்கு ஒரு கடவுள்தான் இருக்கமுடியும்,பல கடவுள் என்பதும் பல தெய்வங்கள் என்பதும் பொய்யான செய்திகளாகும் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே என்றார் வள்ளலார்.உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் வழிபாடாகும் சாதி,மதம் சமயம் எல்லாம் பொய்யானதாகும்.கடவுள் பெயரால் சமயங்களும் மதங்களும் பொய்யான கருத்துகளை சொல்லி மக்களை பிரித்து விட்டார்கள்.அவைகளை நம்பவேண்டாம் என்கிறார் வள்ளலார்.
சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெரும் ஜோதி!
என்கிறார் வள்ளலார்
கலை உரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமேல்லாம்.மணமூடிப் போக என்று சாடுகிறார் வள்ளலார்.
கடவுள் எப்படி உள்ளார் என்பதை கீழவரும் பாடலில் விளக்குகிறார்.
இயற்கையிலே பாசங்கள் ஒன்ருமிளார் குணங்கள்
ஏது மில்லார் தத்துவங்கள் ஏதுமில்லார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் கலங்கமில்ளார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய்
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்க்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் .
என்று கடவுளின் தன்மையைப்பற்றி தெளிவாக தெருயப்படுத்தியுள்ளார்.ஆதலால் கடவுள் ஒருவரே அவர் அருட்பெருன் ஜோதியாக உள்ளார்,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்/
கடவுள் பெயரால் உயிர்பலி செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும் .
எல்லாஉயிர்களியும் தம உயிர்போல் பாவிக்கும் எண்ணம வந்து உண்மையான உரிமையுடன் வாழ வேண்டும்.
மனிதன் மனிதனாக் வாழவேண்டுமானால் அன்பு,கருணை தயவு வேண்டும்.கடவுள் கருணையாக உள்ளார் அதுபோல் நாமும் கருணையுடன் வாழ்ந்தால் நம்மை கடவுள் கைவிடமாட்டார்.
உருவவழிபாட்டினால் கருணை வாராது,பொருளுக்கு முக்கியத்துவம்தான் வருமே ஒழிய அருளுக்கு முக்கியத்துவம் வாராது.அதனால்தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றார்கள்.போருளைத்தேடினால் அருள் வாராது.அருளைத்தேடினால் அனைத்தும் வந்து சேரும்.இதுவே உண்மையாகும்.அருள் தேவையா ?பொருள் தேவையா ?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.உருவ வழிபாட்டினால் அருள் நிச்சியம் கிடைக்காது.உயிர் ஒளி வழிபாட்டினால் அனைத்தும் கிடைக்கும்.ஆதலால் உருவ வழிபாடு தேவை இல்லை என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான அருள் கருத்தாகும்.அதை ஏற்று அனைவரும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.--அன்புடன் கதிர்வேலு