Saturday, April 30, 2011

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்



 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றலும்
வாடி நின்றால் ஓய்வதில்லை
உனக்கும் கிழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி தேடு

Friday, April 29, 2011

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர்

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? “ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார். “அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.” “அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.” “விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறது” என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

Wednesday, April 27, 2011

பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.


இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள். ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.

எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது.

இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல். உனக்கும் சொல்லிக்கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாமும் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல். அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.

உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் சொற்களின்
உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள். உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அரிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

- சுவாமி விவேகானந்தர்.

Sunday, April 10, 2011

பாவம் செய்யாமல் நன்மை செய்து வாழ முடியும்


"நாட்டம் என்றே இரு! சற்குரு
பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றே இரு! பொல்லா
உடலை: அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றிரு சுற்றத்தை
வாழ்வைக் குடம் கவிழ் நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே
உன்னக்குபதேசம் இது."

- பட்டினத்தார் -

"உண்டென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காம
லே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு
உப தேசம் இதே"

- பட்டினத்தார் -

மேலே சொல்லப்பட்ட இரண்டு பாடலும் பட்டினத்தார் தன் மனதிற்கு தானே சொல்லிக் கொள்வது போல அமைந்துள்ளது.

உண்மையை உணர்ந்த ஒழுக்கமுள்ள குருவின் உபதேசங்களை நம்பு, அவர் திருவடிகளை தொழு, உனது உடலும், உறவுகளும், செல்வமும் நிலையானது என்று நம்பாதே ,அப்படி நம்பினால் உடலை வளர்க்கவே பாடுபடுவாய்.இந்த உடல் தோன்றி மறையும் பொம்மலாட்டம் என்று எண்ணு. குடத்தைக் கவிழ்த்ததும் ஓடி மறையும் நீர் போல நிலையற்றது செல்வம் என்று உணர்ந்துகொள். இந்த உண்மையை மறவாமல் எண்ணியிருந்தால் பாவம் செய்யாமல் நன்மை செய்து வாழ முடியும். மனமே! நான் உனக்கு செய்யும் உபதேசம் இதுவே, என்று சொல்லும் பட்டினத்தார்....தொடர்ச்சியாக

யாராக இருந்தாலும் முதலில் தன்னை ஒரு ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும், நேர்மையான வழியில் நடத்தல் வேண்டும், தீய வழியில் நடந்து கொண்டு, பிறருக்கு உபதேசம் செய்பவர் சொல்லும் சொல்லுக்கு மதிப்பிருக்காது, அகந்தையை விடுங்கள், பஞ்சமா பாதகரின் கூட்டுறவு வேண்டாம், பாவ செயல்களில் இருந்து விலகியிருப்போம், நல்லவர்களை குறை கூறாது அவர்தம் நட்பை நாடுவோம், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு நன்னடத்தை முதன்மையானது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாய் நன்றாய் இருப்பதே சிறந்ததது
thanx to http://siththarkal.blogspot.com/