Saturday, July 31, 2010
வேடிக்கை
நீ இங்கு வந்திருக்கிறாய்!
உனது உடல் ஆரோக்கியம் உன் சுற்றத்தில்
நீ உருவாக்கி உள்ள உன் இமேஜ் உன் மனைவி( அல்லது கணவன்) உன் தாய் உன் தகப்பன் உன் குழந்தைகள் உன் குடும்ப அமைப்பு உன் பங்காளிகள் உனது உறவினர்கள் உனது ஜாதி–ஜாதிய அமைப்பு
உனது மதம்–மத அமைப்பு உனது மொழி உனது இனம் நீ உறுப்பினராக உள்ள கட்சி உனது நாடு உனது தொழில் நீ பாதுகாப்பாக நீடித்து உயிர் வாழ்வதற்கான -உன்னைப்போன்ற
உனது முன்னோர்கள் கண்ட ஏற்பாடு- அதை திறம்பட அமைத்துக்கொண்டு விட்டாய்.
உனக்கு அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கவலையில்லை.
இன்னும் ஒரு வருட உணவுக்கு பஞ்சமில்லை. ஏன்– உன் ஆயுளுக்கும் உணவு பஞ்சமே வராமல் ஏற்ப்பாடுகள் செய்து இருக்கிறாய். அது மட்டுமா?
உன் வாரிசுகளின் ஆயுத காலத்திற்கும் , அவர்களுக்கும் உணவு தட்டுப்பாடே ஏற்படாத வகையில் சொத்துக்களை சேர்த்து இருக்கிறாய்.
உனது கனவிலும், கற்பனையிலும் உள்ள உனது வாரிசுகளுக்கும் கூட) . ஆனால் நீ நீ வந்த வேலையை மறந்து விட்டாய் ???????????????
* மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம் உலகவிஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.
*சூரிய உதயத்திற்கு முன்னரே பணிகளைத் தொடங்கினால், அன்றைய பணிகள் யாவும் நன்றாக நடைபெறும். அதுபோல, சிறுவயதிலேயே ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அது முதுமை வரை துணைநிற்கும்.
* கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள்.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தைப் பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினா
இளமையிலேயே ஆன்மிகம்

* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல நீங்கள் பெருமை மிக்கவராக வாழவேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.
-ராமகிருஷ்ணர்
Subscribe to:
Posts (Atom)